தெரு நாய்கள் கடித்து கன்று குட்டி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாத்திமாநகரில் வசித்து வருபவர் வேளாண்கண்ணி வின்செண்ட். இவர் வீட்டில் பசு, ஆடுகள் என கால்நடைகளை வளர்த்து வருகிறார். அப்பகுதியில் தெருநாய்கள் அதிகரித்து வருவதாகவும், தெருவில் செல்லும் பாதசாரிகளையும், வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளையும் அந்த நாய்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்து துரத்துவதும், கால்நடைகளை கடித்து குதறுவதுமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வேளாண்கண்ணி வின்செண்ட் வீட்டில் வளர்த்து வரும் ஒன்றரை வயது கன்றுக்குட்டியை இரவில் நாய்கள் கூட்டம் கடித்து குதறி உடலை சிதைத்துள்ளது. காலை வரை துடிதுடித்துக் கொண்டிருந்த கன்று தற்போது உயிரிழந்தது.
அதனைத்தொடர்ந்து கன்றுக்குட்டி அவர்களது தோட்டத்திலேயே புதைக்கப்பட்டது. வேளாண்கண்ணி வின்செண்ட் வீட்டில் வளர்த்து வரும் கால்நடைகளை அங்குள்ள தெருநாய்கள் பலமுறை கடித்து உள்ளதாக தெருவிக்கும் வேளாண்கண்ணி வின்செண்ட், பலமுறை இதுகுறித்து புகார் அளித்தும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை என வருத்தம் தெரிவிக்கின்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO