திருச்சி பெரியார் சிலைகளுக்கு கூண்டு அமைக்க கூடாது - ஆட்சியர் அலுவலகத்தில் மனு!.

திருச்சி பெரியார் சிலைகளுக்கு கூண்டு அமைக்க கூடாது - ஆட்சியர் அலுவலகத்தில் மனு!.

பெரியார் சிலைகளுக்கு கூண்டு அமைக்க கூடாது என வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Advertisement

தமிழகத்தில் சில இடங்களில் பெரியார் சிலைகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியிலும் இனாம் குளத்தூர் அருகே உள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் ஊற்றி செருப்பு மாலை அணிவித்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு கூண்டு அமைக்கும் பணி தொடர்ந்து வருகிறது. இதற்கு பெரியாரிய உணர்வாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று திராவிடர் விடுதலை கழகம், மக்கள் அதிகாரம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.