"எங்கள் சமூக பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்கக் கூடாது" - திருச்சியில் அகில இந்திய வஉசி பேரவையினர் தீர்மானம்!

"எங்கள் சமூக பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்கக் கூடாது" - திருச்சியில் அகில இந்திய வஉசி பேரவையினர் தீர்மானம்!

அகில இந்திய வஉசி பேரவையின் சார்பாக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுக படுத்திய பிறகு வஉசி பேரவை சமுதாய பெயரான வெள்ளாளர் - வேளாளர் பெயரினை மற்ற சமுதாயத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் வழங்க கூடாது என்றும், மற்ற சமுதாயத்தினருக்கு வழங்க நினைக்கும் அரசியல் கட்சிகளை கண்டிப்பதாகவும், மற்ற சமுதாயத்தினருக்கு வழங்க நினைக்கும் சில அரசியல் கட்சியினரை கண்டித்து அகில இந்திய வஉசி பேரவையின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.