ஶ்ரீரங்கம் கோயில் (ஆகஸ்ட் -2021) இம்மாதத்தில் 8 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா தொற்று 3வது அலை அதிக அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் தற்பொழுது தமிழ் மாதங்களில் சிறப்பு பெற்றது ஆடி மாதம் இம்மாதத்தில் பொதுமக்கள் ஆலயங்களில் சென்று வழிபடுவது வழக்கம். கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதில் ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் ஆலயங்களில் சென்று வழிபட தடை விதித்துள்ளது. மேலும் இனிவரும் விழா நாட்களில் கோவில்களில் பக்தர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இம்மாதத்தில் 8 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி தமிழ்நாடு அரசு நோய் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நோய்த் தொற்றுகளில் இருந்து பக்தர்களை காக்கும் வகையில் இம்மாதம் ஆகஸ்ட் 8, 11, 13, 14, 15, 20, 21, 22 ஆகிய எட்டு நாட்களும் பக்தர்கள் திருக்கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து சன்னதிகளும் ஆகம விதிகளின் உட்பட்டு பூஜைகள் நடைபெறும் என்றும், பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இதே கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn