இந்திய வீரர்களுக்கு இன்னும் கூடுதல் பயிற்சி தேவை - ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு திரும்பிய திருச்சி வீராங்கனைகள் பேட்டி
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டதில் கலந்து கொண்ட திருச்சியை சேர்ந்த சுபா மற்றும் தனலட்சுமி விமானம் மூலம் திருச்சி வந்தனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் வீராங்கனை சுபா செய்தியாளர்களிடம் கூறுகையில்... ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட எங்களுக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். போட்டியில் கலந்து கொள்ள கடுமையான பயிற்சி மேற்கொண்டாலும் கூட ஒலிம்பிக் போட்டி கடுமையாக இருக்கிறது. இந்தியா வீரர்களுக்கு இன்னும் கூடுதலாக பயிற்சி பெற்று அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வோம்.
இந்திய வீரர்களுக்கு துவக்க நிலையிலிருந்தே அனைத்து பயிற்சிகளையும், ஊக்கமும் வழங்க வேண்டும். இதன் மூலம் போட்டிகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கடுமையான பயிற்சி எடுத்தும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், இன்னும் அதிக பயிற்சி எடுக்க வேண்டும் என்பதை எங்களின் தோல்வி உணர்த்தி உள்ளது.
இதனையடுத்து பேசிய தனலட்சுமி.... என்னை போட்டியில் கலந்து கொள்ளாதற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. கடந்த காலங்களில் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் தமிழகத்திற்கு பெரிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் தற்போது வாய்ப்புகள் வருகிறது. இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமான வாய்ப்புகள் வரும் என நம்புகிறோம் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn