தனித்திறமையை தனக்கான அடையாளமாக மாற்றிய ரஞ்சிதா

தனித்திறமையை தனக்கான அடையாளமாக மாற்றிய ரஞ்சிதா

வறுமையோ நம் மீது பிறர் வைக்கும் விமர்சனங்களும் ஒருபோதும் நம் வெற்றியை தடுத்துவிடக் கூடாது நம் திறமை நமக்கான அடையாளத்தை உருவாக்கித் தரும்.. நம்பிக்கையோடு நமக்கான தேடலை தொடங்கினாலே நமக்கான வெற்றி கிடைக்கும்  என்கிறார் ஈவன்ட் மேனேஜ்மென்ட் பிசினஸில் அசத்தும் திருச்சி ரஞ்சிதா ...

சிறுவயதிலிருந்தே வறுமையின் பிடியில் வளர்ந்தோம் இரண்டு வேளை உணவு தமிழ் வழி கல்வி இப்படி என்னுடைய குழந்தை பருவம் முதல் பதின் பருவ வயதுவரை வறுமையின் பிடியிலேயே இருந்து வந்தேன் பள்ளி கல்வியை தொடரக் கூட சிறுவயதில் குடும்பத்தால் இயலாத சூழல் ஏற்பட்டது எனக்கு மூன்று தங்கைகள் உள்ளனர். மூன்றுவேளை உணவே கடினமான சூழலில் கல்வி என்பது எட்டாக்கனியாகி போய்விடும் சூழலும் ஏற்பட்டது அந்த நேரத்தில் என் பள்ளி ஆசிரியரின் ஆலோசனையின்பேரில் பள்ளி மாணவர்களுக்கு வீட்டிலேயே பாடம் கற்றுத் தர தொடங்கினேன் அதிலிருந்து வரும் வருமானத்தின் மூலம் கல்வி கற்றேன்.  கல்லூரி படிப்பு வரை அப்படித்தான் கற்று முடித்தேன்.

வறுமை ஒருபோதும் என் கல்விக்கு தடையாக இருந்ததில்லை பள்ளி முதல் கல்லூரி வரை பள்ளியில் முதல் மாணவியாகவும் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் சிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்று வந்தேன் அந்த கல்வி அளித்த ஊக்கம் என்னை அமெரிக்கா சென்று கற்கும் அளவிற்கு உயர்த்தியது ..இதுவரை ஆறு பட்டப்படிப்புகளை முடித்துள்ளேன். அமெரிக்காவில் படித்து முடித்த பின்னர் அங்கே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பின்னர் இந்தியா திரும்பிய பிறகு ஒரு தனியார் வங்கியில் பணியாற்றினேன் ஆனால் இவை அனைத்துமே என் திறமைக்கான அடையாளமாக இல்லாததாக தோன்றியது உடனடியாக வேலையை விட்டுவிட்டேன். கல்லூரி காலகட்டத்தில் எனக்கு நிகழ்ந்த ஒரு அனுபவம் எனக்குள் இருந்து திறமையை வெளிக்கொணர உதவியது என்று கூறலாம் அவமானங்களே நமக்கான அடுத்த கட்டத்தை உருவாக்கி தரும் என்பார்கள். அதுபோல தமிழ் வழி கல்வி கற்றவர்களுக்கு திறமை இருக்காது படைப்பாற்றல் இல்லை என்று கூறி ஒதுக்கப்பட்ட நாங்கள் இன்று அதனையே என்னுடைய அடையாளமாக மாற்ற நினைத்து ஈவன்ட் மேனேஜ்மென்டை தொடங்கினேன். 

 நண்பர்கள் உறவினர்கள் மூலம் அடுத்தடுத்து என்னுடைய தனித்திறமை அனைவருக்கும் புரிய ஆரம்பித்தது. தொடர்ந்து கிடைத்த வரவேற்பு அதிக ஊக்கத்தை தந்தது. ஒவ்வொன்றையும் புதிது புதிதாக படைப்பாற்றல் மூலம் செய்ய தொடங்கினேன். தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக ஒரு நிறுவனமாகவே பணியாற்றி வருகிறோம் . The Olive tree events என்பது அடையாளமாக மாறிப்போனது. தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் கல்லூரிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் என ஈவன்ட் மேனேஜ்மென்ட் செய்ய தொடங்கினோம் நாளடைவில் எங்களுக்கான தனி அடையாளமாக அது உருவாக்கி போனது 8 ஆண்டுகள் நிறைவில் இன்று பெயர் சொன்னாலே எங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளோம். இந்த படைப்பாற்றலே எங்கள் மூலதனம் இந்த படைப்பாற்றலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கன்ஸ்டிரக்க்ஷன் தொழில் தொடங்கினும் அவை அனைத்துமே ஒரு தீம் ஹவுஸ் கான்செப்ட் ஹவுஸ் ஆக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்தோம் இது அனைத்தையும் செய்வதற்கு ஒரு மாடல் ஹவுஸ் தேவைப்பட்டது. 

அதை எங்கள் வீட்டில் இருந்தே தொடங்கினோம் நாங்கள் நினைத்த அனைத்தையும் அதில் கிரீன்ஹவுஸ் என்ற தீமில் எங்கள் வீட்டை உருவாக்கினோம் இன்று திருச்சியில் இப்படி ஒரு வீடா என்று பலரும் வியக்கும் அளவிற்கு எங்கள் வீட்டை உருவாக்கியுள்ளோம். வரும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் விவரிக்காமல் எங்களுடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்து அவர்களுடைய வீட்டை கட்டி தர சொல்கின்றனர். எந்த தொழிலும் சவால்கள் அதிகம் தான் அதிலும் பெண்களுக்கு என்றால் இன்னும் கூடுதலாகவே இருக்கும் ஆனால் அவை அனைத்தையுமே நம் திறமையும் உழைப்புமே உடைத்தெரியும். என் திறமை மீது நான் வைத்த நம்பிக்கை வறுமையால் கல்வியை விடும் சூழ்நிலையில் இருந்த நான் இன்று பல மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு உதவி செய்யும் அளவிற்கு உயர்த்திஉள்ளது. 5 மாநிலங்களில் இருந்து 7000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் போட்டியிட்ட ஒரு விருது நிகழ்ச்சியில் சிறந்த தொழில் முனைவோர் விருதையும் வென்று உள்ளேன்.

இவர்களெல்லாம் இங்கு ஏன் வந்தார்கள் என்ற நிலை மாறி இவர்கள் எப்போது இங்கு வருவார்கள் என்ற சூழலை எனக்கு நானே உருவாக்கியுள்ளேன். என் மீது நான் வைத்த நம்பிக்கை எனக்கு நானே ஊக்கமளித்துக் கொண்டு கல்வி பெறாத பெற்றோர்களின் வளர்ப்பில் இன்று கல்வியாலும் தனித்திறமை ஆளும் இன்று உலகறியே என்னை நானே உருவாக்கிக் கொண்டேன்.இந்த என்னுடைய வெற்றி பயணத்தில் என்  கணவரும் என் பெற்றோர்களும்  மிக உறுதுணையாகவும் இருந்தனர். அவர்கள் அளித்த ஊக்கம் இன்னும் கூடுதலாக முயற்சிக்கு உதவியது. பெண்கள் தன் திறமையின் மீதும் தன் மீதும் வைக்கும் நம்பிக்கை அவர்களை எவ்வித சூழலில் இருந்தும் வெற்றி மங்கையாக வளம் வர உதவும் என்பதை என் வாழ்வில் நான் கற்றுக் கொண்ட மிகப்பெரும் பாடம் என்கிறார் தன்னம்பிக்கை நாயகி ரஞ்சிதா ..

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision