அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன்! காணச்செல்வாரா ரஜினிகாந்த்?

அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன்! காணச்செல்வாரா ரஜினிகாந்த்?

ஆர்.எம்.வீ. என அழைக்கப்படும் இராம.வீரப்பன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வல்லத்திராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஜி.ஆர் 1953ல் "எம்.ஜி.ஆர் நாடக மன்றம்" மற்றும் "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஆரம்பித்தார். இந்த இரண்டு நிறுவனத்திற்கும் இராம. வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக நியமித்தார். இராம. வீரப்பன் 1963ல் "சத்யா மூவிஸ்" என்ற பெயரில் தனியாக சினிமா பட நிறுவனம் ஆரம்பித்தார்.

அதில் எம்.ஜி.ஆர் தனது தாயாரின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதுபோல அவரின் கைகள் மட்டுமே வரும், தென்னிந்திய நடிகர்சங்க செயற்குழு உறுப்பினராக 1956ம் ஆண்டில் இருந்தார். இருமுறை 1977 - 1986 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும், இருமுறை 1986 இடைத்தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும்1991 இடைத்தேர்தலில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

சத்யா மூவிஸ் தயாரித்த பாட்ஷா பட வெள்ளி விழாவில் ரஜினிகாந்த், வெடிகுண்டு கலாச்சாரம் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தார். அப்போது, ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தார். அவருடைய மந்திரி சபையில், வீரப்பன் உணவு அமைச்சராகப் பதவி வகித்தார். இதன்பின் திடீரென்று அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். சில நாட்களில், அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார். இதன் காரணமாக, "எம்.ஜி.ஆர். கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி இராம.வீரப்பன் தொடங்கினார். ஆனால் அது சரியாக போனியாகவில்லை.

அதன்பின்னர் கருணாநிதியுடன் நட்பு பாராட்டிக்கொண்டு விழாக்களில் வலம் வர ஆரம்பித்தார் ஆனால் அவரால் கோலோச்ச முடியவில்லை இந்நிலையில் 98 வயதாகும் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் இம்மாதம், 9ம் தேதி தன், 98வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. வயது மூப்பால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோர், நேற்று மருத்துவமனைக்கு சென்று, அவரின் உடல்நிலை குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்கள், அவரின் மகன், மகளிடம் விசாரித்தனர். இன்று ரஜினிகாந்த் நேரில் சென்று ஆர்.எம்.வீயின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிப்பார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision