நீங்களும் கோடீஸ்வரர்தான்! இந்த திட்டத்தில் முதலீடு செய்தால்... மனமிருந்தால் மார்கமுண்டு!!

நீங்களும்  கோடீஸ்வரர்தான்! இந்த திட்டத்தில் முதலீடு செய்தால்... மனமிருந்தால் மார்கமுண்டு!!

நாட்டில் பலர் தங்கள் சேமிப்பை நல்ல திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இருந்தாலும், அவர்களுக்கு சரியான தகவல் இல்லாததால், தங்கள் சேமிப்பை நல்ல திட்டங்களில் முதலீடு செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். எங்கு அதிக வருமானம் கிடைக்கும். நீங்களும் உங்கள் சேமிப்பை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா? சந்தை அபாயங்கள் இல்லாமல் உங்கள் பணத்தில் நல்ல வருமானத்தைப் பெறலாம். 

இன்று நாங்கள் உங்களுக்கு ஒரு அற்புதமான திட்டத்தைப் பற்றி சொல்கிறோம். இந்த முதலீட்டுத் திட்டத்தின் பெயர் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம்தான். தற்போது, ​இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் 7.1 சதவிகித வட்டியை பெறுவீர்கள். இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. PPFல் நீங்கள் முதலீடு செய்யும் பணம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். இருப்பினும், 15 வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு, நீங்கள் முதலீட்டு காலத்தை இரண்டு முறை அதாவது 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூபாய் 500 கூட முதலீடு செய்யலாம். அதிகபட்சம் ரூபாய் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆக வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், அதன் முதலீட்டின் தன்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிபிஎஃப்ல் ரூபாய் 1.5 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 12,500ஐ சேமிக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு பிபிஎஃப் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 12,500 முதலீடு செய்தால். முதிர்ச்சியின் பொழுது உங்களிடம் மொத்தமாக ரூபாய் 1,03,08,015 நிதி சேர்ந்து இருக்கும்.

PPFல் செய்யப்படும் முதலீடு EEE பிரிவின் கீழ் வருகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகையின் பலனையும் நீங்கள் பெறுவீர்கள் என்ன மாதா மாதம் 12,500 ஐ சேமிக்க தயாராகி விட்டீர்கள் தானே!.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision