நச்சுன்னு ஏற்றுமதியாகும் நாமக்கல் முட்டை

நச்சுன்னு ஏற்றுமதியாகும் நாமக்கல் முட்டை

தமிழகத்தின் பிரபலமான மாவட்டமான நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்து நுாற்றுக்கனக்கான பண்ணைகளில் இருந்து, தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. அரசின் சத்துணவுத் திட்டம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு 5 கோடி முட்டைகள் தினசரி அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள ஒரு கோடி முட்டை, சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

இதன்படி, நாமக்கல் மண்டலத்தில் இருந்து ஓமன், கத்தார், துபாய், சவுதிஅரேபியா மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியாகிறது. மாதந்தோறும் 5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் ஏற்றுமதியாகிறது. இந்த ஏற்றுமதி சில காரணங்களால், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அண்டை நாடான இலங்கை மாதம் ஒன்றுக்கு ஒன்றரை கோடி முட்டைகளை நாமக்கல்லில் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. தரத்துடன், விலை குறைவாகவும் உள்ளதால், ஏற்றுமதி கணிசமான அளவு அதிகரித்து, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மாதம் 30 கன்டெய்னர் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இப்போது கூடுதலாக 15 கன்டெய்னர்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

வரும் டிசம்பர் இறுதி வரையிலான நாட்களில், இந்த ஏற்றுமதி தடையின்றி நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. இது தொடர்பாக, அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் கூறும்போது... 'இலங்கையில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், நாமக்கல் மண்டலத்தில் இருந்து மாதந்தோறும் கூடுதலாக 15 சதவிகிதம் அதாவது சுமார் 70 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. வளைகுடா நாடுகளுக்கு மாதம் 5 கோடி முட்டைகள் ஏற்றுமதியாகின்றன. ஓமன் நாட்டில் இந்திய முட்டைக்கு பல கட்டுப்பாடு உள்ளதால் அங்கு ஏற்றுமதி தற்காலிகமாக தடைபட்டுள்ளது. ஆனால், இலங்கைக்கு எந்தத் தடையும் இல்லாமல், அனுப்பும் பணி நடக்கிறது" என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision