கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வந்த 2 பள்ளி மாணவிகள் -  சாமர்த்தியமாக மீட்ட கண்டோன்மெண்ட் போலீசார்

கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வந்த 2 பள்ளி மாணவிகள் -  சாமர்த்தியமாக மீட்ட கண்டோன்மெண்ட் போலீசார்

புதுச்சேரி மாநிலம் கொசப்பாளையத்தை சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவியும், முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மற்றொரு பள்ளி மாணவியும் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதில் சரியாக படிக்காததால் பள்ளி மாணவியை அவர்களது பெற்றோர் கண்டித்துள்ளனர் இதனால் இரண்டு பள்ளி மாணவிகளும் கோபித்துக்கொண்டு புதுச்சேரியில் இருந்து பேருந்து மூலம் திருச்சி வந்தனர். இதற்கிடையில் பிள்ளைகளை காணவில்லை என மாணவிகளின் பெற்றோர் உள்ளியார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் தனியாக நின்று கொண்டிருந்த இரண்டு பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வந்ததாக தெரிவித்தனர். உடனடியாக மாணவிகளை அழைத்துக்கொண்டு கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ளியார் பேட்டை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பள்ளி மாணவிகளின் பெற்றோர்களும் கார் மூலம் திருச்சி வந்தனர். பின்னர் அவர்களிடம் முறையாக ஆவணங்களை சரிபார்த்த கண்டோன்மெண்ட் போலீசார் பள்ளி மாணவிகளுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn