சிறைவாசிகளுக்கு அமைதி கல்வி வகுப்பு

சிறைவாசிகளுக்கு அமைதி கல்வி வகுப்பு

திருச்சி மத்திய சிறையில் 1507 சிறைவாசிகள் உள்ளனர். இவர்கள் விசாரணை சிறைவாசிகள் தண்டனை சிறைவாசிகள் தடுப்பு காவல் சிறைவாசிகள் கடன்கார சிறைவாசிகள் என ஒவ்வொருவரும் அவர்களது தொகுதிகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, காவல் துறை இயக்குனர் மற்றும் தலைமை இயக்குனர் அமரேஷ் பூஜாரி ஆணையின்படி தொடர்ந்து பத்து நாட்களாக தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு மூலமாக வழங்கப்படும் அமைதி கல்வி வகுப்பினை தினசரி காலை ஏழு முப்பது மணி முதல் எட்டு முப்பது மணி வரை அனைத்து சிறைவாசிகளது தொகுதிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது.

இதன் மூலமாக சிறைவாசிகளின் மனதில் காணப்படும் தீமையான எண்ணங்கள் அகற்றப்பட்டு நன்மையான சிந்தனைகளை மனதில் கொண்டு செயல்படவும் தங்களது வாழ்க்கையை அமைதியான பாதையில் நடத்தி தனது குடும்பத்தினரை அவர்களது விடுதலைக்குப் பின் அமைதியான முறையில் நடத்திட ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த நிகழ்ச்சி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்நிகழ்ச்சியை தினசரி ஒளிபரப்பு செய்திட திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் செல்வி ஆண்டாள் ஏற்பாடு செய்து நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision