திருச்சி தேசிய கல்லூரி உடற்கல்வித்துறை தலைவர் டாக்டர் பிரசன்ன பாலாஜிக்கு சிறந்த உடற்கல்வி ஆசிரியர் விருது

திருச்சி தேசிய கல்லூரி உடற்கல்வித்துறை தலைவர் டாக்டர் பிரசன்ன பாலாஜிக்கு சிறந்த உடற்கல்வி ஆசிரியர் விருது

திருச்சி தேசிய கல்லூரி உடற்கல்வித்துறை தலைவர் டாக்டர் பிரசன்ன பாலாஜிக்கு சிறந்த உடற்கல்வி ஆசிரியர் விருது

திருச்சி தேசிய கல்லூரி உடற்கல்வித்துறை தலைவர் டாக்டர் பிரசன்ன பாலாஜி இந்த ஆண்டிற்கான PEFI வழங்கும் சிறந்த உடற்கல்வி ஆசிரியர் விருதிற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். PEFI (Physical Education Foundation of India) ஆனது உடற்கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக தேசிய விருதுகளை ஏற்பாடு செய்கிறது. அவர்களின் சேவைகள் குறிப்பிடத்தக்கவை மற்றும் ஆண்டு முழுவதும் அந்தந்த சிறப்பாகச் செயல்பட்ட இந்திய ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.

இன்று முழு நாடும் விளையாட்டின் அனைத்துத் துறைகளிலிருந்தும் பல்வேறு சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது. விளையாட்டுத்துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த அர்ப்பணிப்புள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிப்பதற்கான ஓர் முயற்ச்சியே இவ்வுருதுகள் PEFI ஆனது 2016 ஆம் ஆண்டில் வருடாந்திர விருதை கருத்திற் கொண்டு, இதுவரை நான்கு தேசிய விருதுகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

PEFI விருதுகளின் 5வது ஆண்டு விருது பெற இருப்பவர்களின் விருதுகள் பட்டியலில் திருச்சி தேசிய கல்லூரி உடற்கல்வி துறைத்தலைவர் டாக்டர் பிரசன்ன பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்டதற்காக டாக்டர் ஜி பி கௌதம் விருது சிறந்த உடற்கல்வி ஆசிரியருக்கான விருது  வழங்கப்பட உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn