நோட்டாவுக்கு வாக்கு - ஶ்ரீரங்கம் பகுதி மக்கள் எச்சரிக்கை!!

நோட்டாவுக்கு வாக்கு - ஶ்ரீரங்கம் பகுதி மக்கள் எச்சரிக்கை!!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பல தலைமுறையாக சொந்த மனையில் குடியிருந்தாலும், அந்த நிலத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாத நிலை.

Advertisement

அடிமனை பிரச்சனை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் குடியிருப்போர் வீடுகளை அல்லது நிலங்களை விற்க முடியாது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Advertisement

இதுதொடர்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிமைப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கு ஸ்ரீரங்கம் வந்த முதலமைச்சர் எடப்பாடி மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்திற்கு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என பேசினார். ஆனால் ஸ்ரீரங்கம் மக்களின் மிக முக்கிய வாழ்வாதார பிரச்சனையான அடிமனை பிரச்சனை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் அடிமனை பிரச்சினை குறித்து தீர்வு காணப்படவில்லை என்றால், ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிப்போம் என ஸ்ரீரங்கம் அரங்கமா நகர் நல சங்கம் சார்பாக துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO