திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முன்பதிவிற்கு ஜனவரி 4ம் தேதி கடைசி நாள் - ஆட்சியர் தகவல்!!

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முன்பதிவிற்கு ஜனவரி 4ம் தேதி கடைசி நாள் - ஆட்சியர் தகவல்!!

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முன்பதிவிற்கு தனியார் மருத்துவமனை மற்றும் பணியாளர்களுக்கு வழங்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வருகின்ற ஜனவரி 4ம் தேதி கடைசி நாள் ஆகும். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 30ம் தேதி வரை மொத்தம் 372 மருத்துவமனைகள் மட்டுமே இலவச தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

மத்திய அரசு சார்பில் கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக இலவசமாக தடுப்பு மருந்தை வழங்க உள்ளது. இதில் முதல் கட்டமாக மருத்துவத் துறையைச் சார்ந்த அனைத்து அலுவலர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் இதர பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதில் திருச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், சிகிச்சையகம், ஆயுர் கிளினிக்கல் மற்றும் எட்டாபிளிஸ்மென்ட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைவரிடமும் பணியாளர்களை சமர்ப்பிக்க கடந்த நவம்பர் 11ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் 100 சதவீதம் முழுமையாக சேகரிக்கப்பட்ட நிலையில், 1389 தனியார் மருத்துவமனை கிளினிக்கல் மற்றும் எட்டாபிளிஸ்மென்ட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன‌. இதில் கடந்த 30ம் தேதி வரை 372 மருத்துவ மனைகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதம் உள்ள மருத்துவமனைகள் இன்னும் பதிவு செய்யாத நிலையில் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் வருகின்ற ஜனவரி 4ம் தேதிக்குள் தங்கள் மருத்துவமனையில் உள்ள அலுவலர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் இதர ஊழியர்களின் விவரத்தை http://hmis.nhp.gov.in என்ற இணையதள முகவரில் குறிப்பிட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து திருச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மின்னஞ்சல் முகவரிக்கு trichy.jdhsgmail.com மற்றும் திருச்சி சுகாதார பணிகள் இணை இயக்குனர் dphtry@nic.in என்ற தெரிவிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு மட்டும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்றும், கடைசி நாள் 22 ஆம் தேதி என்று தெரிவித்தும் இன்னும் பல தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்யாத நிலையில் ஜனவரி 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.