இருசக்கர வாகன பிரச்சார பேரணி - புல்லட் ஓட்டிய அமைச்சர்

Nov 19, 2023 - 13:11
Nov 19, 2023 - 13:19
 950
இருசக்கர வாகன பிரச்சார பேரணி - புல்லட் ஓட்டிய அமைச்சர்

திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநில உரிமை மீட்பு இரண்டாவது மாநில மாநாட்டிற்கான’ இருசக்கர வாகன பிரச்சார பேரணியை 15’ஆம் தேதி கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முன்பாக தொடங்கி வைத்தார்.

இருசக்கர வாகன பேரணி திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதி வருகை புரிந்ததையொட்டி அமைச்சர், இளைஞர்களை வரவேற்று திருவெறும்பூர் தொகுதிக்கான பிரசாரத்தை திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பால்பண்ணை முதல் காட்டூர் தந்தை பெரியார் சிலை வரை அமைச்சர் இருசக்கர வாகனத்தை ஓட்ட பின் தொடர்ந்த வாகன பேரணி சென்றது.

இந்நிகழ்வில் மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், பகுதி கழக செயலாளர் நீலமேகம், தர்மராஜ், விஜயகுமார், சிவா, ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே எஸ்.எம். கருணாநிதி, கங்காதரன், பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision