திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் புதிய ரக துப்பாக்கி அறிமுகம்

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் புதிய ரக துப்பாக்கி அறிமுகம்

திருச்சி மாவட்டம் நவல்பட்டில் உள்ள படைகலன் தொழிற்சாலையில் திருச்சி கார்பைன் என்ற புதிய ரக துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவானது இன்று படைகலன் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

அப்போது அதன் பொது மேலாளர் சஞ்சய் திவேதி, கார்பைன் ரக துப்பாக்கியை அறிமுகப்படுத்தினார். இந்த புதிய ரக துப்பாக்கியானது படைக்கலன் தொழிற்சாலையில்  உருவாக்கப்பட்டது.

இது சிறிய மற்றும் இலகு ரக ஆயுதமாகும். இதனை போர் வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், பராட்ரூப்பர்கள், காவல்துறை, விமான நிலையங்கள் மற்றும் சிறப்பு செயல்பாட்டு படை வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் பொருத்தப்பட்டுள்ள (special muzzle booster) சிறப்பு முகவாய் பூஸ்டர் மூலம், துப்பாக்கி சூட்டின் போது எழும் ஒளி மற்றும் சத்தத்தை குறைக்கிறது.

இங்கு துப்பாக்கியில் அசால்ட் ரைபிளின் வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தலாம். இதேபோல் அசால்ட் ரைபிள் மற்றும் ஏ.கே47ன் உதிரிபாகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். கார்பன் புதிய ரக துப்பாக்கியை பாதுகாப்பு வீரர்களின் கவச உடைக்குள் மறைத்து வைத்து பயன்படுத்த ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr