குடிநீர் குழாய் உடைப்பு - புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத திருச்சி மாநகராட்சி

குடிநீர் குழாய் உடைப்பு - புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி 27வது வார்டு செந்தணீர்புரம் நுழைவு பகுதி பாலத்திற்கு கீழே ஒரு வாரமாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து மக்கள் சக்தி இயக்கத்தினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகைப்பட ஆதாரத்தோடு புகார் அளித்தனர்.

ஆனால் ஒரு வார காலம் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் குடிநீர் குழாய் உடைப்பு குடிநீர் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த குடிநீர் குழாய் உடைப்பால் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்படும் நிலையும், தண்ணீர் சாலையில் செல்வதால் பள்ளம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இது மட்டுமின்றி குடிநீர் அதிக அளவு வெளியேறுவதால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பது காரணமாக அப்பகுதி மக்கள் சாலை ஓரத்தில் குழி தோண்டி குடிநீர் சாலையில் தேங்காதவாறு பாதை ஏற்படுத்தியுள்ளனர் தொடர்ந்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் மாநகராட்சியின் அலட்சியப் போக்கால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn