திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ள ஊராட்சிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்து அடங்கிய வரைபடம்

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ள ஊராட்சிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்து அடங்கிய வரைபடம்

திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியின் மக்கள் தொகை 10 லட்சத்து 45 ஆயிரத்து 436 ஆக உள்ளது. இந்த மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டது. இந்த விஸ்தரிப்பு மூலம் திருச்சி மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க அந்தந்த பகுதி ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உயரும். அதோடு கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டம் கிடைக்காது என்ற அச்சம் காரணமாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மக்களின் எதிர்ப்பையும் மீறி திருச்சி மாநகராட்சியுடன் 20 ஊராட்சிகள் மற்றும் ஒரு டவுன் பஞ்சாயத்தையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த 20 ஊராட்சிகள் மற்றும் ஒரு டவுன் பஞ்சாயத்து இணைப்பதன் மூலம் திருச்சி மாநகராட்சியின் மக்கள் தொகை 13 லட்சத்து 37 ஆயிரத்து 570 ஆக உயரும்.

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக கூறப்படும் ஊராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து பெயர்கள்

மண்ணச்சநல்லூர் டவுன் பஞ்சாயத்து, மாதவ பெருமாள் கோவில், பிச்சாண்டவர் கோவில், தாளக்குடி, கீரமங்கலம், கூத்தூர், மதகுடி, பனையகுறிச்சி, குண்டூர், ஓலையூர், மணிகண்டம், மேக்குடி, கே கள்ளிக்குடி வடக்கு, கே கள்ளிக்குடி தெற்கு, தாயனூர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, மல்லியம்பத்து, மருதண்டகுறிசி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர்.

ஆகிய 20 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த வரைபடமும், பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn