திருவெறும்பூர் டூ மத்திய பேருந்து நிலையத்திற்கு புதிய ஏசி பேருந்து - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

திருவெறும்பூர் டூ மத்திய பேருந்து நிலையத்திற்கு புதிய ஏசி பேருந்து - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் 15 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருவெறும்பூர் ஆகும். இதன் அருகே பெல் நிறுவனம் துப்பாக்கி தொழிற்சாலை, எச் இ பிஎஃப் தொழிற்சாலை, துவாக்குடி பகுதியில் அரசு கலைக்கல்லூரி, உணவக மேலாண்மை கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் புகழ்பெற்ற தேசிய தொழில்நுட்ப கழகம் எனும் என்ஐ டி ஆகியவை உள்ளது.


இப்பகுதிகளில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறன. எப்பொழுதும் கூட்ட நெரிசலாகவே பேருந்துகள் சென்று வரும் தற்பொழுது இங்குள்ள பொதுமக்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு ஒரு ஏசி சொகுசு பேருந்து விட்டால் சிறப்பாக இருக்கும் என்று தொகுதி எம்எல்ஏ-வும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டுக்கொண்டனர். 

அதன்பேரில் இன்று முதல் திருவெறும்பூரில் இருந்து மத்திய பேரூந்து நிலையத்திற்கு புதிய ஏசி சொகுசு பேருந்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அத்தோடு அந்த பேருந்தில் ஏறி மத்திய பேருந்து நிலையத்தில் பயணம் செய்தார்.

இப்பேருந்து துவாக்குடியில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு 22 கிலோமீட்டர் தொலைவுக்கு நாளொன்றுக்கு 16 முறை சென்று வர குறைந்தபட்சம்  கட்டணம் 15 ரூபாய் அதிகபட்ச கட்டணம் 40 ரூபாய் ஆகும் அனைத்து நிறுத்தத்திலும் நின்று செல்லும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn