மூன்று நாள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் நியாய விலைக் கடைகள் - பொதுமக்கள் பாதிப்பு

மூன்று நாள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் நியாய விலைக் கடைகள் - பொதுமக்கள் பாதிப்பு

தமிழகம் முழுவதும் சுமார் 30, ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் கிராமப்புறங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.

இக்கடைகளில் சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கத்தின் சார்பில் பல்வேறு காலக்கட்டங்களில் தெரிவித்தும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பணியாளர்கள் பெரும் மன உளச்சலுடன் பணிபுரிந்து வருகின்றனர். பணியாளர்கள் நலன் கருதி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட 9 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் கடந்த 21ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் மற்றும் நியாய விலைகடைப் பணியாளர்கள் அனைவரும் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து இன்று திருவெறும்பூர் அருகே மலைக்கோயில் பகுதியில் கோரிக்கை மனு ஏந்தி அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் நியாய விலை கடை பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தீபாவளி நேரத்தில் நியாய விலை கடைகள் பூட்டி இருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision