திமுக வேட்பாளரின் தந்தைக்கு வாக்கு சேகரித்த கமலஹாசன் கூட்டத்தில் சலசலப்பு
நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்டமாக தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் முக்கிய நிர்வாகிகளும் கட்சி வேட்பாளர்கள் கூட்டணி கட்சியை சார்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பொது மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற இந்தியா கூட்டணி தமிழகத்தில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் அங்கம் வகித்து வருகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகளை சார்ந்த வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.. இதன் ஒரு பகுதியாக திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து ஶ்ரீரங்கம் கோவில் ராஜ கோபுரம் முன்பு திறந்த வேனில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
அதற்கு அடுத்தப்படியாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அருண் நேருவை ஆதரித்து மூன்று இடங்களில் பிரச்சாரம் செய்தார். பெரம்பலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை ஆதரித்து பேசுவதற்காக மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிக்கு வந்திருந்தார்.
துறையூர் தொகுதியில் பாலக்கரை பகுதியில் திறந்த வேனில் பேசும் பொழுது தனக்காக ஓட்டு கேட்க வரவில்லை எனவும் தம்பி கே.என்.நேருவுக்கு வாக்கு சேர்க்க வந்தேன் எனவும் பேசினார். வேட்பாளர் அருண் நேருவின் பெயரை குறிப்பிடாமல் வேட்பாளர் தந்தையின் அமைச்சர் நேருவின் பெயரை குறிப்பிட்டு வாக்கு சேகரித்தார். இதனால் கட்சி நிர்வாகிகளிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலர் வேட்பாளரின் பெயரை பல முறை எடுத்துக் கூறிய பிறகு சமாளித்துக் கொண்டு வேட்பாளர் பெயர் அருண் நேரு என கூறி ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision