சாபம் விட்ட நரிக்குறவ இன மக்கள் - வேட்பாளருடன் தப்பிச்சென்ற எம்எல்ஏ.

சாபம் விட்ட நரிக்குறவ இன மக்கள் - வேட்பாளருடன் தப்பிச்சென்ற எம்எல்ஏ.

வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக, திமுக, ஐஜேகே, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் என மொத்தம் 23 போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினந்தோறும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.   

இந்த நிலையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எறையூர் சர்க்கரை ஆலை நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில், திமுக வேட்பாளர் அருண் நேருவுடன் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ., ம.பிரபாகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிக்க சென்றனர். இதனிடையே நரிக்குறவ இன மக்களுக்காக அதிமுக ஆட்சி காலத்தில் எறையூர் கிராமத்தில் வழங்கப்பட்ட 243.49 ஏக்கர் விவசாய விளை நிலத்தை கடுமையான எதிர்ப்பை மீறி அரசு கையகப்படுத்தி, பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் மூலம் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட்டது. இதனால் நரிக்குற இன மக்கள் கடுமையான கோபத்துக்குள்ளாகி இருந்தனர். இந்நிலையில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவுடன் பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட நரிக்குறவர் காலனிக்கு சென்று வாக்கு கேட்க வந்தனர்.

முற்பட்ட நிலையில், அங்கிருந்த நரிக்குறவர் இன மக்களில் ஒரு சிலர் எங்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்த விவசாய விளை நிலத்தை நீங்கள் எங்களிடமிருந்து பறித்துக் கொண்டிருக்களே? நீங்க நல்லா இருப்பீங்களா என சாபமிட்டனர். இதை சற்றும் எதிர்பாராத பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், மக்கள் ஒன்று சேர்வதை கண்டு அடுத்து இங்கிருந்தால் பிரச்சனை என மக்கள் தங்கி இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் செல்லாமல் வெளிப்புறமாகவே பிரச்சாரம் செய்துவிட்டு ஒரு சில நிமிடங்களில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சீக்கிரம் எடுங்கடா என பிரச்சார வாகனத்தில் விருட்டு என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நரிக்குறவர் இன மக்கள்... 40 ஆண்டு காலமாக தங்களது பயன்பாட்டில் இருந்த விவசாய நிலத்தை திட்டமிட்டு திமுகவினர் பிடுங்கி கொண்டதாகவும், இதனால், இந்த தேர்தலில் திமுகவிற்கு தாங்கள் வாக்களிக்கப் போவதில்லை என்றும், ஓட்டு கேட்டு யாரும் வராதீர்கள் என்றும் தெரிவித்தனர். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில், வாக்கு கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக நிர்வாகிகளிடம்பொது மக்கள் அடிப்படை வசதி கூட செய்து தரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்கதை ஆகி வருவதால், திமுகவினர் இன்னும் மற்ற இடங்களில் எப்படி சென்று வாக்கு சேகரிப்பது என்று திணறி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision