போடு வச்சு தேர்தல் புறக்கணிப்பு - உடனே ரோடு போட்டாச்சு

போடு வச்சு தேர்தல் புறக்கணிப்பு - உடனே ரோடு போட்டாச்சு

திருச்சி மாநகராட்சி 39 வது வார்டுக்கு உட்பட்ட காட்டூர் கைலாஷ் நகர் அண்ணா சாலை பகுதியில்சாலையை பறித்து போட்டு 7 மாதங்கள் ஆகியும் சரி செய்யாத திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாகவும் யாரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம் எனக் கூறி அண்ணா சாலை குடியிருப்போர் பொதுமக்கள் என்ற பெயரில் பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருச்சி மாநகராட்சி 39 ஆவது வார்டுக்கு உட்பட்ட காட்டூர் கைலாஷ் நகர் அண்ணாசாலை பகுதியில் மாநகராட்சி சார்பில் சாலை போடுவதற்காக கொத்தி போடப்பட்டு 7 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சாலையை போடவில்லை இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சாலைகளில் சென்று வருவதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

 இது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக அப்பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக அரசியல் கட்சிகள் வருவார்கள் என்பதால் எங்கள் பகுதிக்கு யாரும் வாக்கு சேகரிக்க வர வேண்டாம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாங்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் எனக் கூறி  மூன்று இடங்களில் பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர் 

இதனைத் தொடர்ந்து இன்று அப்பகுதிக்கு வந்த திருவெறும்பூர் வருவாய் வட்டாட்சியர் மற்றும் திருச்சி மாநகராட்சி துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதி பொதுமக்களிடமும் நலச்சங்க நிர்வாகிகள் இடமும் பேச்சுவார்த்தை நடத்தி மூன்று நாட்களில் சாலை பணிகளை முடித்து தார் சாலைகள் அமைத்து தருகிறோம் என்று உறுதி அளித்ததின் பேரில் அப்பகுதி பொதுமக்களும் நலச் சங்கத்தினரும் அரசு அதிகாரிகளுக்கும் தமிழக அரசிற்கும் நன்றி தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision