சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

திருச்சி மாவட்டம், சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பானது, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மாணவர்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு A.அக்பர்அலி , சார்-ஆட்சியர், ஜெயங்கொண்டம் லிக்னைட் மின் திட்டம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் பதினெட்டு வயது நிரம்பிய அனைத்து குடிமக்களும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் எனவும் கூறினார்.

வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, முதல் முறையாக வாக்களிக்கவிருக்கும் மாணவர்களாகிய நீங்கள் உங்களது வாக்கினை எவ்வித தயக்கமும் பாகுபாடும் இல்லாமல் அளிக்க வேண்டும், வாக்களிக்க பணம் உள்ளிட்ட எவ்வித பரிசுப் பொருட்களையும் பெறக்கூடாது. அவ்வாறு பெறுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திட்டன்படி குற்றமாகும் என்பதையும் மாணவர்களுக்கு நினைவூட்டினார். இந்தியாவில் நடைபெறக்கூடிய தேர்தல்கள் பற்றியும் அதன் வரையறைகள் பற்றியும் விளக்கமளித்தார், தேர்தலில் வேட்பாளர்களுக்கு அளிக்கப்படும் சின்னங்களின் முக்கியத்துவம் பற்றியும் மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கான வேறுபாடுகளையும் விளக்கினார்.

தேர்தல் சமயங்களில் பின்பற்றப்படும் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக விளக்கினார். இந்தியாவில் தொடக்க காலத்தில் இருந்து தற்பொழுது வரை பின்பற்றப்படும் பல்வேறு தேர்தல் முறைகள் குறித்தும் அதன் வரலாற்றுப் பின்னனிகள் பற்றியும் தேர்தலில் பயன்படுத்தும் பல்வேறு வகையான இயந்திரங்கள் பற்றியும் தெளிவுபடுத்தினார். வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தினார்.

மேலும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தேர்தல் மற்றும் வாக்காளர் விழிப்பணர்வு குறித்த செய்திகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இறுதியாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். K.கார்த்திகேயன் செய்திருந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision