திருச்சி கல்வி நிறுவனத்துடன் குடகு ரிசார்டின் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
திருச்சியில் உள்ள ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (SIHMCT), மற்றும் தமரா கூர்க் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டுள்ளது.
விருந்தோம்பல் (Hospitality) கல்வி மற்றும் தொழில் பயிற்சித்துறையில் குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பைக் குறிப்பிடும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கூட்டாண்மையானது கல்வியின் தரத்தை மேம்படுத்துவதையும், நிஜ உலக விருந்தோம்பல் அமைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், உயர்தர விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற ஆடம்பர ரிசார்ட்டான தி டமாரா கூர்க்கில் ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி மாணவர்கள் இன்டர்ன்ஷிப், தொழில்துறை வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் என கிடைக்க வழிவகை செய்யப்படும்.
இந்த ஒப்பந்தம் மாணவர்களுக்கு நேரடியாக விருந்தோம்பல் துறைக்கு பொருந்தும் திறன்களை வளர்க்க உதவுவதுடன் கல்வி கற்றல் மற்றும் நடைமுறை அனுபவத்திற்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision