பல வருடங்களுக்கு பிறகு தொடங்கிய விமான சேவை - பயணிகளிடம் வரவேற்பு!!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாங்காங் வரை செல்வதற்கான தாய் ஏர்ஏசியா நிறுவனம் தன்னுடைய பயணத்தை ஏழரை வருடங்களுக்கு பின்பு தொடங்கியுள்ளது. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி என மூன்று நாட்களுக்கு இந்த விமான சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்கால சோழர்களுக்கும் சியாம் அரசிற்கும் இடையே இருந்த தொடர்பு திரும்ப தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் திருச்சி விமான நிலையம், இந்த விமான சேவை ஆரம்பித்ததை வெகு சிறப்பாக கோலகலமாக நேற்று இரவு கொண்டாடியுள்ளது.
மேலும் திருச்சியில் இருந்து பாங்காங் செல்லும் பயணிகளிடம் இந்த விமான சேவை பலத்த வரவேற்பு பெற்றுள்ள நிலையில், 176 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision