ஸ்ரீரங்கம் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார் 

ஸ்ரீரங்கம் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார் 

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சென்னையில் அவரது உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.தீவிர அரசியலில் ஈடுபட போவதாக முதலில் கூறிய அவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து சசிகலா  தஞ்சைக்கு  சென்றார்.அங்கு  கோவிலுக்கு சென்று வழிப்பட்டார். அவருடன் உறவினர்கள் ஏராளமானோர் இருந்தனர்.

இதையடுத்து இன்று காலை திருச்சி வந்த அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பெருமாள், தாயாருக்கு வஸ்திரங்கள் கொடுத்தார்.

ஒரு மணிநேரம் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள அனைத்து சந்நதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் அவர் உறவினர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் ஆகியோர் உடனிருந்தனர்.