திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆய்வு

திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்ட எல்லைக்குட்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 02.05.2021 அன்று நடைபெறவுள்ள மையமான ஜமால் முகமது தன்னாட்சிக் கல்லூரியில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று 19.03.2021 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் முறையாக தனிமனித இடைவெளியுடன் தேர்தல் அலுவலர்கள் பணியாற்றுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் மாவட்ட  தேர்தல் அதிகாரியுமான மாவட்ட ஆட்சியர் மாநில சிவராசு நேரில் ஆய்வு செய்தார் .  திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன்  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் வாக்கு எண்ணிக்கை  மையங்கள் முழுவதையும் நேரில் பார்வையிட்டார்.

ஆய்வின் போது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி இ.கா.ப. மற்றும் தேர்தல் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU