மேகதாது அணை விவகாரம் திருச்சியில் விவசாயிகள்ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மேகதாது அணை விவகாரம் திருச்சியில் விவசாயிகள்ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மேகதாது அணைகட்ட தடுத்துநிறுத்திட வலியுறுத்தியும், மணப்பாறையில் விவசாயி வீடு, நிலங்களை ஜப்திசெய்து ஏலம்விடும் நடவடிக்கைக்கு எதிராகவும் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கரும்புலிப்பட்டி கிராமத்தில் பன்னீர்செல்வம் என்ற விவசாயி 14லட்சம் வங்கியில் விவசாயத்திற்காக கடன்பெற்று அதில் 7லட்சம் செலுத்தியநிலையில், தற்போது பல்வேறு கணக்குகளை சேர்த்து 58லட்சத்திற்கு கணக்கு காட்டி அவரது 3கோடி மதிப்புள்ள வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை ஜப்திசெய்து 58லட்சத்திற்கு ஏலம்விட்டு விவசாய குடும்பத்தினரை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளதைக் கண்டித்தும், இதுபோன்ற கொடுமை இனி தமிழகத்தில் நிகழக்கூடாது என்பதை வலியுறுத்தியும், மேகதாது அணையைக் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்ககூடாது என்பதனை வலியுறுத்தியும் இன்றையதினம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டண ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோன்று மேகதாது அணைகட்ட தடுத்துநிறுத்திட வலியுறுத்தி உச்சநீதிமன்றம், பிரதமரைச்சந்தித்து முறையிடவில்லையென்றால் தமழகம் பாலைவனமாக மாறிவிடும் என்றும், பொட்டாஷ் விலைஉயர்ந்தபோதிலும் நெல்லுக்கான விலையினை நிர்ணயிக்க தமிழக அரசும், மத்திய அரசும் மறுத்துவருகிறது.

மேலும் நெல்கொள்முதல்நிலையங்களில் நெல்லைக் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் 20நாட்களுக்கு நெல்லை கொள்முதல் செய்யமறுத்து அதிகாரிகள் விவசாயிகளை காத்திருக்க வைத்திருப்பதாகவும் இதற்கு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதனை வலியுறுத்தியே போராட்டம் நடத்துவதாகவும் விவசாய சங்கத்தலைவர் அய்யகாக்கண்ணு தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO