தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சியில் தற்காலிக புதிய பேருந்து நிலையம் இன்று முதல் செயல்பட தொடங்கியது

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சியில் தற்காலிக புதிய பேருந்து நிலையம் இன்று முதல் செயல்பட தொடங்கியது

திருச்சி மன்னார்புரம் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திருந்து புதுக்கோட்டை மற்றும் மதுரைக்கு பேருந்துக்கள் இயக்கப்படுகிறது. அதேபோல சோனா மீனா தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய தற்காலிக பேருந்து நிலையத்திற்கு தஞ்சை, நாகை, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துக்கள் இயக்கப்படுகிறது.

சென்னை, கோவை, கரூர் பேருந்துகள் வழக்கம் போல மத்திய பேருந்து நிலையத்தில் வந்து செல்லும். மன்னார்புரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை மாநகர காவல் உதவி ஆணையர்கள் அஜய் தங்கம், முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவில் போக்குவரத்து கும்பகோணம் கோட்ட துணை மேலாளர்கள் ஜூலியஸ் அற்புதராஜ், சிங்காரவேலன், ரங்கராஜன், நகர கோட்ட மேலாளர் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிகளுக்காக கூடுதலாக 200 பேருந்து இயக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision