திருச்சியில் நேற்று(30.05.2022) பெய்த மழை அளவு விவரம்
திருச்சி மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடியவுள்ள உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பெய்த மழையால் ஓரளவு வெப்பத்தைத் தணித்து உள்ளது அந்த வகையில் தமிழகத்தில் மத்திய பகுதியான திருச்சியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மேகங்கள் திரண்டன, காற்று வீச தொடங்கியது,வானில் மின்னல் வெட்டியது, இடி இடித்தது சிறிது நேரத்தில் மழை தொடங்கியது சிறிது சிறிதாக கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று(30.05.2022) நிலவரப்படி அதிகபட்சமாக 62.80மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் விவரம்:
லால்குடி 16.20மிமீ,தேவமங்கலம் 18.20 மிமீ,சமயபுரம் 15.20மிமீ,சிறுகுடி 1.00மிமீ, வாத்தலை அணைக்கட்டு 31.00மிமீ, மணப்பாறை 10.40மிமீ, முசிறி 13.00மிமீ,கோவில்பட்டி 21.20,பொன்னையார் டேம் 23.80மில்லிமீட்டர்,புலிவலம் 20.00மிமீ, நவலூர் குட்டப்பட்டு36.20மிமீ, தேன்பரைநாடு1.00 மிமீ, துறையூர் 26.00மிமீ, கொப்பம்பட்டி 20மிமீ,பொன்மலை 10.20 மிமீ,திருச்சி விமான நிலையம் 9.40மிமீ,திருச்சி ஜங்ஷன் 32.00மிமீ, திருச்சி டவுன் 25 மிமீஎன்ற அளவில் பதிவாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக திருச்சியில் பெய்த மழை அளவு 350.70 மிமீ, சராசரியாக 14.61மிமீ என்ற அளவில் பதிவாகியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..