திருச்சி பூம்புகார் விற்பனை மையத்தில் 1 லட்சம் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி - 15 லட்சம் இலக்கு

திருச்சி பூம்புகார் விற்பனை மையத்தில் 1 லட்சம் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி - 15 லட்சம் இலக்கு

தமிழகத்திலுள்ள கைவினைக் கலைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பூம்பூகார் விற்பனைநிலையம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக மக்களால் இல்லங்களில் நட்பை வளர்க்கும் விதமாகவும், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் (22.09.2021) முதல் அக்டோபர் 20ம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி 'கொலு பொம்மைகள்' கண்காட்சி தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.

இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக பலவித கொலுபொம்மைகள், ராமாயண கதையை விளக்கும் பொம்மைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், கடவுள்கள், 2000 கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகிதக்கூழ், மண், பலிங்கு, மாக்கல், மெழுகு, சந்தனமரம், நூக்கமரம் போன்ற பொருட்களால் ஆன பொம்மைகள், புதிய வரவுகள் என 1 லட்சத்திற்க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் ரூ.50 முதல் 50 ஆயிரம் வரை இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் விற்பனை இலக்கு 15 லட்சமாக நிர்ணயிக்கபட்டுள்ளது.

அரசு வழிகாட்டுதலின்படி ஏற்படுத்தப்பட்டிருந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை சமூகஇடைவெளியுடன் ஏராளமானோர் பார்வையிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர். அரசு வழிகாட்டுதலின்படி கொலு பொம்பைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், நலிவடைந்த கலைஞர்கள் தயாரித்த கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கொரோனா ஊரடங்கால் கைவினைக் கலைஞர்கள் தங்களது கைவினை பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் நலிவடைந்த நிலையில் இருந்தனர். இதுபோன்ற கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பொதுமக்கள் வருகை தந்து கொலு பொம்மைகளை பார்வையிட்டு கலைபடைப்புகளை வாங்கிச் செல்ல வேண்டுமென பூம்புகார் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn