வங்கி கிளை மேலாளரை கொலை முயற்சி செய்த நகை மதிப்பீட்டாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5,000/- அபராதம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருவெள்ளரையில் கோகிலா 38/18 W/o ஜெயராமன் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதே வங்கியில் இமானுவேல் லூர்து ஜோசப் 41/18 S/o கில் பட் என்பவர் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், மேற்படி இமானுவேல் லார்ட் ஜோசப் அடிக்கடி வங்கிக்கு காலதாமதமாக வந்ததால் எதிரி மீது வாதி புகார் அனுப்பியதாகவும், இதனால் வாதிமீது எதிரி முன்விரோதம் கொண்டு வாதி வங்கி வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எதிரி வாதியின் குடிநீர் பாட்டிலில் தங்கம் தரம் பிரிக்க பயன்படுத்தப்படும் நைட்ரிக் ஆசிட் அமிலத்தை கலந்து கொலை செய்ய முயற்சி செய்ததாக, மேற்படி கோகிலா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் காவல் . 145/18, U/s 328, 307 IPC @ 328, 307 & 450 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கானது திருச்சி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று (29.08.2024) வழக்கின் எதிரி இமானுவேல் லூர்து ஜோசப் 41/18 S/o கில் பட் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000/- அபராதமும். அபராத தொகை கட்ட தவறும்பட்சத்தில் ஆறு மாத காலம் கூடுதல் சிறை தண்டனையும் விதித்து முதன்மை குற்றவியல் உத்தரவிட்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision