திருச்சியில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

திருச்சியில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

கும்பகோணம் அருகே நாச்சியார் கோயில் பகுதியில் சேர்ந்தவர் தான் பிரபல ரவுடியான தமிழரசன் என்கின்ற ஜெகன் என்கின்ற குரங்கு ஜெகன் இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் படிக்கும் வயதிலேயே கொலை கொள்ளை கட்டப்பஞ்சாயத்து வழிப்பறி ஆட்கடத்தல் போன்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இவர் மீது அரியலூர் மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாச்சியார் கோவில் திருவிடைமருதூர் திருநீலக்குடி கும்பகோணம் தாலுகா காவல் நிலையம் சுவாமிமலை கும்பகோணம் மேற்கு மற்றும் கிழக்கு காவல் நிலையங்கள் மற்றும் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றது. மேற்படி ஜெகன் என்கின்ற தமிழரசன் கடந்த இரண்டு வருடமாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு கடைசியாக அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அகல்யாநல்லூர் என்னும் பகுதியில் பிரபல ரவுடியான செல்வகுமார் என்கின்ற சடையமங்கள் செல்வகுமார் இடம் சேர்ந்து ராஜி மோகன் என்பவரை காரில் வைத்து கடத்தி வெட்டிக் கொன்றார்கள் கடந்த ஓராண்டாக அம்மாபேட்டை காவல் நிலைய கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

மேற்படி இவர் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த பிரபல கூலிப்படை தலைவன் லாலி மணிகண்டன் சேர்ந்து பல கொலைகளை செய்துள்ளான் மற்றும் நாளை மணிகண்டன் சிறைக்கு சென்ற பிறகு பிரபல ரவுடி ஐயப்பன் சேர்ந்து வழிபறி கொலை வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. தற்பொழுது வடமட்ட ஐயப்பன் மற்றும் லாலி மணிகண்டன் ஆகியோர் சிறைக்கு சென்ற பிறகு பணத்திற்காக செல்வகுமார் என்கின்ற சடயங்கள் செல்வகுமார் சேர்ந்து ஆட்கடத்தல் கொலை செய்துவிட்டு கடந்த ஓராண்டாக தலைமுறைவாக இருந்து வந்துள்ளான்.

கடந்த ஓராண்டாக ஹரித்துவார் உத்திர பிரதேஷ் சட்டீஸ்கர் ராய்ப்பூர் ஆகிய பகுதிகளில் ஒளிந்திருந்த ஜெகன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் வந்து zomatoவில் மணிபுரிந்து வந்துள்ளான். மேலும் கடந்த ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரையில் இருந்து திருச்சி வந்துள்ள ஜெகன் அவன் கூட்டாளியான காதர் சந்திக்க திருச்சி வந்துள்ளான். மேற்படி ஜெகன் வருவதை ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி பூரணி அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார், உதவி ஆய்வாளர் முத்துக்குமார், தலைமை காவலர் பிரபு மற்றும் காவலர்கள் விஜயகுமார், சந்தோஷ் பிரபாகர் ஆகியோர் அடங்கிய தனிப்படை மேற்படி எதிரி ஜெகன் திருச்சி ரயில் நிலையத்தில் வருவதை அறிந்து சுற்றிவரத்தை துப்பாக்கி முனையில் கைது செய்து விசாரித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision