வரலாற்றில் முதல்முறையாக ஸ்ரீரங்கத்தில் இருந்து வஸ்திர மரியாதை மந்திராலயம் சென்றது

வரலாற்றில் முதல்முறையாக ஸ்ரீரங்கத்தில் இருந்து   வஸ்திர மரியாதை மந்திராலயம் சென்றது

பாரத நாட்டில் மாநிலங்களுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உறவு மேம்பட, 2022 - 2023ம் ஆண்டு தமிழக அரசின் சட்டமன்ற அறிவிப்பின்படி, பல்வேறு மாநிலங்களில் உள்ள திருக்கோயில்களுக்கும், தமிழக திருக்கோயில்களிலிருந்து வஸ்திர மரியாதை வழங்கிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு -ஆந்திரா மாநிலங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் உறவு மேம்பட தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் வஸ்திர மரியாதை மற்றும் பகுமானம் எனப்பபடும் சீர்பொருட்கள் உள்ளிட்டவை ஆந்திரா மாநிலம் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் மூல பிருந்தாவனமான " மந்த்ராலயத்தில் "

இன்று 12.08.2022 அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இணை ஆணையரும் (கூடுதல் பொறுப்பு) தக்காரும்மான சீ. செல்வராஜ், ஸ்ரீ இராகவேந்திர சுவாமி பிருந்தாவனம் பீடாதிபதி "சுபுதேந்திர தீர்த்தர் " அவர்களிடம் பட்டு வஸ்திரங்கள் , மாலைகள் ,பழங்கள் உள்ளிட்ட மங்கலசீர் பொருட்களை வழங்கினார்.

உடன் அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO