விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்யும் டிராபிக் மார்ஷல் வாகனத்தை காவல் ஆணையர் துவக்கினார்

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்யும் டிராபிக் மார்ஷல் வாகனத்தை காவல் ஆணையர் துவக்கினார்

திருச்சியில் மாநகர போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக டிராபிக் மார்ஷல் இரண்டு சக்கர வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு முன்பாக ஆணையர் கார்த்திகேயன்  துவக்கி வைத்தார்.

திருச்சி மாநகரத்தில் அரியமங்கலம், பாலக்கரை, கோட்டை, உறையூர் மற்றும் ஸ்ரீரங்கம் 6 போக்குவரத்து ஒழுங்கு பிரிவினருக்கு தலா ஒரு இரண்டு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. டிராபிக் மார்ஷல் வாகனம் மூலம் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்யும் வகையில்   முதலுதவி பயிற்சி முடித்தவர்கள் இருப்பார்கள். வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று முதல் உதவிகளை செய்து  போக்குவரத்து நெரிசலையும் சீர்செய்து அதற்கான மருத்துவ உதவியும் செய்வார்கள் என மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn