திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காமல், தி.மு.க.வினர் வழிபாடு
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மாத ஊதியம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதி வழங்கப்படும், என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று கோவில் பணியாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், ரெங்கவிலாஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக கோவிலுக்குள் பக்தர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் நிகழ்ச்சிக்காக வந்த தி.மு.க.வினர், ஆர்யபட்டாள் வாசல் வழியாக, கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்தனர்.
அமைச்சர்களுக்கும் கோவிலுக்குள் முதல் மரியாதை வழங்கப்பட்டது. மேலும்
விழாவில் கலந்து கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு உள்ளிட்ட அதிகாரிகள், 650 கோவில் பணியாளர்களுக்கு நான்காயிரம் ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கினர்.
தற்போது, பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கோவில்களை திறப்பதற்கான உத்தரவு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் , பெரும்பாலான பணியாளர்கள், தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும், இன்று நடைபெற்ற நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். கொரோனா
நோய் தொற்றைத் தடுப்பதற்கு, அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், இது போன்ற நிகழ்ச்சிகளில், கட்டுப்பாடு விதிகள் பின்பற்றபடாமல் காற்றில் பறக்க விடப்படுகிறது. இதை முதல்வர் கவனத்தில் கொண்டு, கட்சியினரின் போக்கை கட்டுப்படுத்த வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW