வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பும் பணி தொடக்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பும் பணி தொடக்கம்

தேர்தல் வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் இருந்து வாக்குப்பதிவுக்கு கணினி வழி குழுக்கள் முறையில் தேர்வான வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சியின் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் ஆய்வு.

தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் பேட்டி..திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தை நேற்று குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் தொகுதி வாரியாக இன்று பிரித்து அனுப்பப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் 2547 வாக்கு சாவடி மையம் உள்ளது 3053 வாக்குபதிவு இயந்திரம், 3053 கட்டுப்பாட்டு கருவிகள், 3307 விவிபேட் உள்ளது. மண்டல அலுவலர்களுக்கு நாளை பயிற்சி வழங்கப்படுகிறது. வாக்கு அலுவலர்களுக்கு வரும் 24 ஆம் தேதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. திருச்சியில் நேற்று மாலை வரை 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 7 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது 63 லட்சம் கைப்பற்ற பட்டுள்ளது. இன்று காலை 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 10 லட்சத்திற்கு மேல் இருந்தால் வருமான வரி துறையில் தெரிவிக்கப்படும் ஆவணம் சரியாக இருந்தால் திருப்பி ஒப்படைக்கப்படும். தலைவர்களில் சிலைகள் மூட வேண்டாம் சிலைகளில் கீழே உள்ள பெயர்களை மூட வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision