CPR செய்து இருந்தால் எனது மகனை காப்பாத்தி இருக்கலாம் - இறந்த மாணவரின் தந்தை பேட்டி
திருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் நேற்று முன்தினம் பள்ளியில் வலிப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இது குறித்து கண்டோன்மென்ட் போலீசார், பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில் மாணவர் 2.48 மணியில் சோர்வாக இருந்து இருக்கையில் அமர்ந்தார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு இறந்தார். இந்த சிசிடிவி காட்சி நேற்று வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த மாணவனின் பெற்றோர்கள் மற்றும் மற்ற மாணவர்களில் பெற்றோர்கள் பள்ளியியை முற்றுகையிட்டனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் வகுப்பறையில் இல்லாது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் அந்த மாணவர் இருதய பாதிப்பு உள்ளதால் ஏன் தனி கவனம் செலுத்தவில்லை ? என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிசிடிவி காட்சிகளை ஆராய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவனின் பெற்றோர்கள் மற்றும் சக பெற்றோர்கள் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். இந்த போராட்டம் காரணமாக பள்ளி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது
தொடர்ந்து பேசிய மாணவனின் தந்தை மற்றும் சித்திப்பா கூறும்போது..... சிசிடிவி நாங்கள் பார்த்து விட்டோம் வராண்டாவில் உள்ள காட்சி இல்லை. அங்கு ஏதேனும் நடந்திருக்குமா என சந்தேகம் உள்ளது. அங்கு யாரேனும் எனது மகனை அடித்தார்களா எனவும் சந்தேகம் உள்ளது எனக் கூறினார். பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் ஆண்டு விழாவிற்காக துணி எடுப்பதற்காக வெளியே சென்றுள்ளனர்.
இதனால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 15 நிமிடத்திற்குள் கொண்டு CPR செய்து இருந்தால் எனது மகனை காப்பாத்தி இருக்கலாம் என கூறியுள்ளார். இவர்கள் காலம் தாழ்த்தி எனது மகனை கொண்டு சென்றுள்ளனர் என கண்ணீர் மல்க கூறினார்
தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கூறும் போது.... ஆண்டு விழா என்பதற்காக 3 வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் பணியில் இருப்பார்கள். பெற்றோர்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி வகுப்பறையில் அதிகமாக மாணவர்கள் படிப்பதாக கூறுகின்றனர். அது உடனடியாக நிறைவேற்ற முடியாது. ஆனால் அதை நிறைவேற்ற முயற்சி செய்வோம். மேலும் கழிவறைகள் சுத்தமாக வைக்க கோரிக்கை வைத்தனர். அதனை சரி செய்து விட்டோம். மேலும் பல்வேறு கோரிக்கைகள் எடுத்துள்ளன அதை படிப்படியாக செய்வோம் என கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision