இரு சமூகத்தினருக்கிடையே பிரச்சனை - இரண்டு நபர்கள் கொலை - நான்கு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

இரு சமூகத்தினருக்கிடையே பிரச்சனை - இரண்டு நபர்கள் கொலை - நான்கு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

திருச்சி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லையில் கடந்த (06.07.2024)-ந் தேதி ஒரு சமூகத்தை சேர்ந்த ஒருவர் தனது உறவினர் என நினைத்து ஒரு பெண்ணிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்டதாகவும், அதற்கு ஆதரவாக மற்றொரு சமூகத்தை சேர்ந்த ஒருவர் பேசியதாகவும், இதனை மேற்படி பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, கடந்த (07.07.24)-ந் தேதி இரு சமூகத்தை சேர்ந்த நபர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும், மேற்படி பிரச்சனையில் ஆயுதத்தால் தாக்கியதில் ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்துவிட்டார். மேலும் ஒருவர் அரசு மருத்துவமனை சிகிச்சையில் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

மேற்படி இரண்டு நபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, 1.ஆனந்தபாபு (26), த.பெ.செல்லதுரை, 2.வினோத் (21), த.பெ.தங்கவேல், 3.பிரபாகரன் (25), த.பெ.ராஜசேகர், 4.முருகானந்தம் (27), த.பெ.தங்கவேல் மற்றும் 7 எதிரிகள் கைது செய்யபட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி நான்கு எதிரிகளின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார். அதனை தொடர்ந்து எதிரிகள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக 1.விக்னேஷ் 2.ரஞ்சித் 3.அஜெய் 4.சரண்ராஜ் ஆகிய 4 நபர்கள் காவல் ஆணையர் உத்தரவின்பேரில் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் உள்ளார்கள். இவ்வழக்கின் 11 எதிரிகளில் இதுவரை 8 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது அதிரடி நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision