மாணவ - மாணவிகளுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்
பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்து மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு கடுமையான வெயிலின் தாக்கம் இருந்ததால் ஜூன் 10ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ஏராளமான மாணவ மாணவிகள் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். அவர்களை வரவேற்கும் விதமாக பள்ளி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்றனர். மாணவர்களை வரவேற்பதற்காக ஆர்வமுடன் பள்ளியில் ஆசிரியர்கள் காத்திருந்தனர். மேலும் 8 மணிக்கு முன்பாகவே பள்ளிகளுக்கு ஆர்வமுடன் மாணவர்கள் வருகை தந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision