ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் ஆனந்த குளியல்

ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் ஆனந்த குளியல்

திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டாள் கோவில் பூஜைகளில் சமரசம் வீசுவது, நம்பெருமாளுக்கு காவிரியிலிருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து செல்வது ஆகியவை செய்வது வழக்கம். ஸ்ரீரங்கம் வாசிகளின் மிகவும் பாசத்துக்குரிய சிநேகிதி யானை ஆண்டாள். அதேபோல தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்புக்குரியது ஆண்டாள் யானை.

இதுமட்டுமின்றி நவராத்திரி விழாவில் ஆண்டாளின் பங்கு அளப்பரியது. சுட்டியாக சுறு சுறுப்புடன் இருக்கும் ஆண்டாள், ஆர்கன் வாசிப்பது சலங்கை அணிந்து ஒற்றை காலில் நொண்டி அடிப்பது என பல அறிய செயல்களை செய்து பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகனுடன் பிடிவாதமாக பேசுவதும் போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆண்டாள் கலந்து கொள்வதில்லை.

இதற்கிடையில் கோவையைச் சேர்நத தொழிலதிபர் 20 வயதுடைய பிரேமி என்ற லட்சுமி யானையை ஶ்ரீரங்கம் கோவிலுக்கு வழங்கினர். இந்த ஆண்டாள் மற்றும் லட்சுமி யானைகள் சகோதிரிகளாக நன்கு பழகியுள்ளன. தற்பொழுது கோடை காலம் தொடங்கி நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது.

கோடை வெயில் வெப்பத்தை தணிக்க ஶ்ரீரங்கம் ஆண்டாள் மற்றும் லட்சுமி காவிரி ஆற்றில் இறங்கி பாகன்களுடன் ஆனந்த குளியல் போட்டது. குறைவான அளவு தண்ணீர் இருந்தாலும் மகிழ்ச்சயோடு குளித்தது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf