புதிய திட்டத்தால் பாதிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம இளைஞர்கள்

புதிய திட்டத்தால் பாதிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம இளைஞர்கள்

திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் தச்சன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இன்று மாவட்ட ஆட்சியாரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில்... நச்சன்குறிச்சி கிராமம் புல எண் 161/1-ல் 0.81 (2 ஏக்கர்) கல்லாங்குத்து வகைபாடு என்னும் இடத்தில் தச்சன்குறிச்சி கிராமத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அருகாமையில் சுமார் 100 மீட்டரில் 246 கிராமம் பயன்பெறும் கூட்டு குடிநீர் திட்டம் அமைச்சர் K.N நேரு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த காடு கழிவு நீர் திட்டம் அமுல்படுத்தப்பட்டால் 246 இராமம் பயன்பெறும் கூட்டு குடிநீர் திட்டம் பாதிப்பு அடையவதோடு, மேலும் சுற்றி வசிக்கும் கிராமங்களுக்கு குடிநீர் மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு ஏற்படும் அபயாம் உள்ளது. 

மேலும் மிக அருகாமையில் வனத்துறைக்கு சொந்தமான 2940 ஏக்கர் உள்ளது. அதில் உள்ள வன விலங்குகளுக்கு நீர் ஆதாரமும் மற்றும் காற்று மாசுபடும் குழல் ஏற்படும். ஆகவே மேற்கண்ட பாதிப்புகள் மற்றும் சுற்றி வசிக்கும் கிராம மக்களின் நீர் ஆதாயத்தினை கருத்தில் கொண்டு திட்டத்தினை ஆய்வு செய்து

இத்திட்டம் தச்சன்குறிச்சி கிராமத்திற்கு தேவையற்றது என்பதை கிராம பொதுமக்கள் சார்பாக வேண்டி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision