திருச்சி அருகே வெங்காய வெடி வீசி வெட்டு குத்து

திருச்சி அருகே வெங்காய வெடி வீசி வெட்டு குத்து

திருச்சி சமயபுரம் அருகே அகிலாண்டபுரம் கிராமத்தில் முன் விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் முத்திரையர் இனத்தைச் சேர்ந்த செல்வகுமார் கோஷ்டிக்கும், ஆர்வி கோஷ்டிக்கும் ஏற்பட்ட முன் விரோத்த்தில் செல்வக்குமார் கோஷ்டியைச் சேர்ந்த அகிலாண்டபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காட்டுராஜா என்பவரின் வீட்டின் உள்ளே புகுந்து அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து டிவி பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திய 5க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடிவிட்டனர்.

இதுப்பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision