தாறுமாறாக சென்ற டேங்கர் லாரி ஆட்டோ மீது மோதி விபத்து - மூன்று பேர் உயிரிழப்பு.

தாறுமாறாக சென்ற டேங்கர் லாரி ஆட்டோ மீது மோதி விபத்து - மூன்று பேர் உயிரிழப்பு.

காரைக்காலில் இருந்து சேலம் மேச்சேரிக்கு தாது மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்திநகர் தனியார் கல்யாண மண்டபம் அருகே லாரி வந்த போது பேரிங் உடைந்து பழுதாகி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி லாரி தாறுமாறாக வலது புறம் சென்றது.

இதற்கிடையில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி திருப்பராய்த்துறைக்கு சென்ற பேசஞ்சர் ஆட்டோ மீது மோதி அருகிலுள்ள அய்யன் வாய்க்காலில் டேங்கர் லாரி கவிழ்ந்தது. இதில் லாரியின் அடியில் பயணிகள் ஆட்டோ சிக்கிக் கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த மூன்று நபர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டவர்களை போலீசார் 2 கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி அடியில் இறந்து 3 பேரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில்..... திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுக்கா, திருப்பராய்த்துறை அணலையைச் சேர்ந்த சுசீலா, இவரது மகன் சரவணன் 38, திருப்பராய்த்துறையைச் சேர்ந்த அரவிந்த் ஆட்டோ ஓட்டுனர் 34 ஆகிய மூன்று பேர் உயிரிழந்தவர்கள் என்பது தெரியவந்தது. இறந்த சரவணன் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். சரவணனுக்கு ஒரு குழந்தையும், தற்பொழுது மனைவி கர்ப்பமாக உள்ளார். இதேபோல் ஆட்டோ டிரைவரின் மனைவியும் முதல் குழந்தைக்கு கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை சரி இல்லாத தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது நடந்த விபத்தில் தாய் சுசிலா, மகன் சரவணன், ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த் ஆகியோர் பரிதாபமாக உயிழந்தனர். விபத்தில் உயிரிழந்த சரவணனின் மகன் மாற்றுதிறனாளி சிறுவன் ஆவான். அச்சிறுவனுக்கும் மருத்துவ செலவினை சரவணன் பார்த்து வந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த் திருமணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகிறது. அவருடைய மனைவிக்கு வளைகாப்பு நடத்த வேண்டிய நேரத்தில் அவருடைய இறப்பும் பெரும் வேதனை அளிக்கிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தக்க ஆறுதலையும் முதலமைச்சரின் நிவாரண நிதியையும் வழங்க வேண்டும் என்று திருச்சி மாவட்டம்சாலை பயனீட்டாளர் நல குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision