திருச்சியில் முன்னாள் மாணவர்கள் திறந்த திருவள்ளூர் சிலை

திருச்சியில் முன்னாள் மாணவர்கள் திறந்த திருவள்ளூர் சிலை

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1965 ஆம் ஆண்டு முதல் தாயகம் திரும்பிய முன்னாள் உண்டு உறைவிட பள்ளியில் பயின்ற மாணவர்கள் 60 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 300 மாணவர்கள் சந்தித்து தங்களது பள்ளியில் உருவாக்கிய திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்கள்.

 இதில் அனைவரும் தங்களால் இயன்ற பொருளுதவி மற்றும் உடல் உழைப்பு செய்துள்ளார்கள். அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சந்தித்தது மிகவும் ஆச்சரியப்படத்தக்கதாக இருந்தது. தற்போது பயிலும் சுமார் 850 மாணவ மாணவிகளுக்கு மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

பல வருடங்கள் கழித்து ஒன்றாக சேர்ந்ததால் அனைவரும் மகிழ்ச்சியுடன் கை கொடுத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் மற்றும் அனைத்து பள்ளி மாணவர்கள் மாணவிகள் மற்றும் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது இதில் அனைவரும் மகிழ்ச்சியுடன் விழாவை மிகவும் சிறப்பாகவிழாவை நிறைவு செய்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision