ஜாமீனில் வெளிய வந்த ரவுடியை மனைவி கண்முண்னே வெட்டி கொலை

ஜாமீனில் வெளிய வந்த ரவுடியை மனைவி கண்முண்னே வெட்டி கொலை

திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கின்ற ஆட்டுக்குட்டி சுரேஷ் (33). பூ வியாபாரியான இவர் பாமக ஸ்ரீரங்கம் பகுதி முன்னாள் தலைவர். இவர் தனது மனைவியுடன் ஏர்போர்ட் பகுதியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.

அப்போது ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகர் வழியாக வந்த பொழுது மூன்று இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் திடீரென சுரேஷின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து பட்டாக்கத்தி, அருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சுரேசை சாரமாரியாக வெட்டியது. இதைக் கண்ட அதிர்ச்சி அடைந்த அவரது மனைவியை தடுக்க முயன்றார். அப்போது அந்த கும்பல் அவரை கீழே தள்ளி விட்டு அவரது காலில் வெட்டியது.

பின்னர் சுரேஷ் தலையில் பயங்கரமாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனை அடுத்து அந்த கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனைவி ராகினியை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணைய காமணி வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் பட்டப் பகலில் பிரபல ரவுடி சந்திரமோகன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆட்டுக்குட்டி சுரேஷ் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனின் வெளிவந்துள்ளனர்.

இதில் சுரேஷ் சில நாட்கள் வெளியூரில் தங்கியிருந்தார். மேலும் பழனி கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஸ்ரீரங்கம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பலால் வெற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision