போலி சான்றிதழ்கள் தயாரிப்பு - சித்த மருத்துவ சங்க மாநில தலைவர் கைது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம் பூண்டி கிராமத்தில் உள்ள ஒரு வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக சான்றிதழ்கள் கிடந்தது. இதை அந்த வழியாக நடைப யிற்சிக்கு சென்ற பல்கலைக்கழக அதிகாரிகள் பார்த்து, அந்த சான்றிதழ்களை பல்கலைக்கழகத்திற்கு எடுத்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அவை போலியான சான்றிதழ்க என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அதிணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கிள்ளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிதம்பரம் மன்மதசாமி நகர் பகுதியை சேர்ந்த சங்கர் (37), சிதம்பரம் கிருஷ்ணமூர்த்திநகரை சேர்ந்த நாகப்பன் (50), அருட்பிரகாசம் ஆகிய 3 பேரும், போலி சான்றிதழ்கள் தயாரித்தது தெரியவந்தது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
இதையடுத்து அவர்களது வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில் அங்கிருந்த ஏராளமான போலி சான்றிதழ்கள், பெயர் எழுதப்படாத போலி சான்றிதழ்கள், அதைதயாரிக்க பயன்படுத்திய லேப்டாப், பிரிண்டர், போலி முத்திரை, போலி அடையாள அட்டைகள், செல்போன் உள்ளிட்ட வற்றை கைப்பற்றினர். தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை உத்தரவிட்டது. அதன்படி இந்த ஆவணங் களை ஆய்வு செய்த கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் அகில இந்திய சித்த மருத்துவ சங்க மாநில தலைவராக உள்ள திருச்சியை சேர்ந்த சுப்பையா பாண்டியன் (60) என்பவர், போலி சான்றிதழ் தயாரித்த கும்பலுக்கு ஏஜெண்டு போல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று திருச்சி குறிஞ்சி நகரில் உள்ள சுப்பையா பாண்டியன் வீட்டுக்கு சென்றனர்.
தொடர்ந்து அவரது வீடு முழுவதும் சோதனை நடத்தியதில், சுப்பையாபாண்டியன் மற்றும் அவரது மனைவி பெயரிலும் போலி சான்றிதழ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டடது. மேலும் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சுப்பையா பாண்டியனை கைது செய்து கடலூர் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision