உதயநிதி பிறந்தநாள் - இனிப்பு வழங்கிய தெற்கு திமுகவினர்

உதயநிதி பிறந்தநாள் - இனிப்பு வழங்கிய தெற்கு திமுகவினர்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 46 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழி காட்டுதலின் பேரில் திருச்சி மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் தலைமையில், திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் தெற்கு மாநகரக் கழக நிர்வாகிகள் மற்றும் பகுதி வட்டக்கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் கடைவீதி மற்றும் பேருந்துகளில் பயணம் செய்த மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் பகுதி கழக செயலாளர் மோகன், நீலமேகம், விஜயகுமார், ராஜ்முகமது, பாபு, நகரத் துணைச் செயலாளர் சந்திரமோகன்ஃ பொன்.செல்லையா மற்றும் வட்ட பகுதி நகரக் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision