உற்பத்தி லாபத்தில் நிறைவு செய்திட வலியுறுத்தி பெல் தொழிற்சாலை முன்பு தொழிற்சங்கங்கள் உண்ணாவிரத போராட்டம்

உற்பத்தி லாபத்தில் நிறைவு செய்திட வலியுறுத்தி பெல் தொழிற்சாலை முன்பு தொழிற்சங்கங்கள் உண்ணாவிரத போராட்டம்

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் திருவெறும்பூர் அருகே உள்ளது இந்த நிறுவனம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நிர்வாகம் ஜே சி எம் தேதியை உடனே அறிவிக்க வேண்டும். சரியான செயல் திட்டத்துடன் உற்பத்தியை லாபத்தில் நிறைவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெல் மெயின் கேட் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு பெல் ஐஎன்டியுசி தொழிற்சங்க பொதுச்செயலாளர் அந்தோணி அலெக்சிஸ் திரவியம் தலைமை வகித்தார் என்டிஎல்எப் பொதுச் செயலாளர் உத்திராபதி, 

பிசிஇயூ பொதுச் செயலாளர் மணிமாறன், எல் எல் எப் பொதுச் செயலாளர் லட்சுமணன், டாக்டர் அம்பேத்கார் யூனியன் பொதுச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் பெல் மெயின்கேட் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் அந்தோணி அலெக்ஸ் திரவியம் செய்தியாளர்களிடம் பேசியதாவது... தீபாவளி பண்டிகை முடிந்து இதுவரை பெல் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்காத பெல் நிர்வாகத்தை கண்டிப்பதோடு   தற்போதைய பெல் நிர்வனத்தின் நிலை குறித்து தொழிற்சங்கங்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும் உற்பத்தியை எப்படி நிறைவு செய்யப் போகிறோம் என்பது குறித்தும் தொழிற்சங்கங்களுக்கு தெரிவிக்காததை கண்டித்தும் இந்த ஆண்டு உற்பத்தியை லாபத்தில் நிறைவு செய்திட வேண்டியும்

குடியிருப்பு பகுதியில் 6 ஆயிரம் வீடுகள் உள்ளதாகவும், அவை பராமரிப்பில்லாமல் மழைக்காலத்தில் அருவிபோல் தண்ணீர் கொட்டுவதாகவும், மேலும் சாலைகளில் சரியில்லாமல் ஆங்காங்கே மழை நீர் தேங்கி குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதாகவும், பள்ளிகள் திறந்து உள்ள நிலையில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இதை அனைத்தையும் பெல் நிர்வாகம் சரி செய்து கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அடுத்தகட்ட போராட்டத்திற்கு செல்வோம் என அந்தோணி அலெக்ஸ் திரவியம் கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn